Recent Posts

Responsive Advertisement

பஞ்சபூத இயக்க விதிகள் - 1

பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் அடுத்த பகுதிக்குள் செல்வதற்கு முன், பஞ்சபூத இயக்க விதிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். 

ஒரு வித்து (விதை) இத்தனை நாளில் தான் முளைக்க வேண்டும். முளைத்த விதையானது இத்தனை காலத்திற்குள் பூத்துப் பிஞ்சாகி, காய்த்து கனிந்து தானாக விழ வேண்டும். இவையெல்லாமே ஒரு ஒழுங்குமுறையான இயற்கை விதி.

இந்த விதி யாருடையது?

காலங்கள் பலவாகப் பிரிகிறது. இந்த காலத்தில் தான் இன்னது நடக்க வேண்டும் என்ற கால புருஷ தத்துவத்தை ஆராய்ந்து பாருங்கள்.

இளமை, முதிர்ச்சி, வீழ்ச்சி இவை மனிதனுக்கு மட்டுமல்ல படைக்கப் பட்ட ஜீவராசிகளான மரம் , செடி, கொடி, ஊர்வன, பறப்பன என அனைத்துமே ஒரே அழகான விதிக்குள் கட்டுப்பட்டே இயங்குகின்றன.

இந்த விதியை சரியானபடி அமைத்தது யார்?

மனிதன் எனும் போது இரண்டு கண், இரண்டு காது, இரண்டு கை, இரண்டு கால், ஒரு மூக்கு, ஒரு வாய், ஒவ்வொரு கை கால்களிலும் ஐந்து விரல்கள் என்பன பொதுவானவை.

இவை மனித இனத்தில் மாறுபடுவதில்லை.

ஐம்பொறி ஐம்புலன் அறிவு.
உடம்பில் ஒரே அளவான உஷ்ணம். 
வாத, பித்த, சிலேத்துமம் என்ற உடல் தாது.
எல்லோருக்கும் இன்பமாய் வாழ வேண்டுமென்ற ஆசை.
இதனால் படைப்பவன் ஒரே ஒரு தன்மையான இறைவன்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது திருமூலரின் திருவாக்கு.

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில் தான் இறைவன் பஞ்ச பூதத்தை வைத்து செய்கிறார்.

பஞ்ச பூதங்கள் - மண் ( நிலம் ), நீர்,  நெருப்பு, காற்று, ஆகாயம் (வெளி) .

எல்லா நட்சத்திரங்களும், எல்லா கிரகங்களும் இந்த பஞ்சபூதத் தன்மை பெற்றே அதன் கலப்பும் இயக்கமும் பெற்றிருக்கின்றன.

இதனை புரிந்து கொண்டால், மனித வாழ்வில் சுகம், துக்கம், பிணி, மூப்பு, வாழ்வு, சாவு, அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் இவைகளை உணரவும் அவற்றினை தமது ஆளுமையில் கொண்டு வர முடியும். புரிந்து கொள்ளாவிடில், தமது ஆளுமையில் கொண்டு வர முடியாமல் தோல்வியில் தான் முடியும்.

ஆகவே ஐந்து பிரிவான ஐம்பூதங்களில் அனைத்துமே அடங்கி இருக்கின்றது. 

ஆதியான அஞ்சிலும் அநாதியான நாலிலும்
சோதியான மூன்றிலும் சொரூபமற்றரண்டிலும்
 நீதியான தொன்றிலும் நிறைந்து நின்ற வத்துவை

என்ற இந்த பஞ்ச பூதக் கலப்பே இறைவனுடைய திருமேனி.
இந்த மேனியை அலங்கரிப்பவையே கிரகங்கள், நட்சத்திரங்கள்..
இந்த பஞ்ச பூதக் கலப்பே எல்லாவற்றிலும். 

சித்தர்கள் தத்துவப்படி, ஐம்பூதமே உலகத்தைப் படைத்து, காத்து அழித்து வருகிறது.
- தொடரும் -

Post a Comment

0 Comments


Comments

Ad Code

Responsive Advertisement