Recent Posts

Responsive Advertisement

பஞ்சபூத இயக்க விதிகள் - 3

அடுத்ததாக நாம் பஞ்சபூதங்களின் குணங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.
ஒவ்வொரு பூதத்திற்கும் மூன்று வேறுபட்ட குணங்கள் இருக்கின்றன. அவை சாத்வீக அல்லது சத்வ குணம், 
ராட்சஷ அல்லது ரஜஸ் குணம், 
தாமச அல்லது தமஸ் குணம் என்று பெயரிடப்பட்டுள்ளன.

இந்த முக்குணங்களின் விளைவாக ஞானேந்திரியங்கள் கர்மேந்திரியங்கள் தொழில்களை  உருவாகின்றன. சாந்தமாக செயலாற்றினால் சாத்வீகமாகவும் , விரைந்து செயல்பட வேண்டியிருப்பின் ராட்சச குணமாகவும், மிகவும் மந்தமாக செயல் படுவதை தாமச குணமாகவும் கருதப் படுகிறது.

ராட்சச அம்சத்தில் இருந்து, காற்று -  நிற்றல், நடத்தல் என தொழில்களை கால்களின் மூலமாகவும்,  நெருப்பின் வாயிலாக எடுத்தல், கொடுத்தல், வாங்குதல் என்கிற தொழில்களை கைகளின் மூலமாகவும், நீரின் மூலமாக உடலின் கழிவுகளை வெளியேற்றும் தொழில்களை கருவாயும் சிறு நீர்த் தாரையும் கொண்டு செய்கின்றன.

பிராணன் என்கின்ற காற்று நம் உடலின் ஒவ்வொரு அவயத்திலும் உள்ளது.
அவை உள்ளே செல்வதும் வெளியேறுவதுமாக இருப்பதினால் தான் உடலே இயங்குகிறது. உடலில் இருந்து காற்று தத்துவம் முழுமையாக நீங்கினால் இந்த உடல் செயலற்று இயங்காமல் போய்விடுகிறது.

 நாசியால் உள்ளிழுக்கப் படும் காற்றை பிராணன் என்றும் வெளியேறும் காற்றை அபானன் என்று நாம் பெயரிட்டு அழைக்கின்றோம்.

உள்ளிழுக்கப் படும் காற்றின் உதவியால், உடலினுள் இரத்த ஓட்டம் உடலெங்கும் சீராகவும் வேகமாகவும் மெதுவாகவும் என நிலைமைக்குத் தகுந்தவாறு பரவச் செய்கின்றன. 
வெளியேறும் காற்றின் உதவியால் கழிவுகளை வாந்தி எடுத்தல், ஏப்பம், கண்ணீர் சிந்துதல் போன்ற செயல்களும் நடைபெறுகின்றன. உடலில் இருந்து உயிர் வெளியேற்றவும் உதவுகின்றன.

உடலின் வளர்ச்சிக்காக உண்ணப்படும் உணவை ஜீரணிக்கவும் உதவுகின்றன. ஜீரணிக்கப் பட்ட உணவின் ரசத்திலிருந்து கிடைக்கும் சத்துக்களையும் இரத்த ஓட்டத்தில் கலந்து அவையங்களுக்கு அனுப்பவும் காற்று உதவுகின்றது. 

உள்மூச்சு, வெளி மூச்சு, கொட்டாவி, தும்மல் போன்ற இயக்கங்களும் காற்றே செயல் பட காரணமாகும். பசி, தாகம் ஏற்படவும் காற்றே காரணமாகும். 

இவ்வாறு தொழில் புரியும் காற்றை தச வாயுக்கள் என அழைக்கப்படுகின்றன.

மேலும், மனம் வாயு(காற்று) வின் அம்சமாகும். நினைவும் மறதியும் எங்கின்ற செயல்களைக் கொண்டு காற்றைப் போல இங்கும் அங்குமாக அலைந்து திரியும்.

ஆகாயத்தின் குணமாவது வெகுளி, மதம், மானம், அகங்காரம், உலோபம் எனும் ஐந்தாகும். இவைகள் ஐந்தைந்தாக பிரிந்து இருபத்தைந்து தத்துவங்களாக உருப்பெறும்.

புத்தி நெருப்பின் குணமானதால், பொருள்களின் சுய உருக்களை நிச்சயித்து அதன் விருத்திகளை அறிவது புத்தியாகும். நன்மை தீமைகளை ஆராய்ந்தறிய புத்தி உதவுகிறது. 

சித்தம் நீரின் குணமாகும். பொருள்களின் மீதான நினைப்பே சித்தமாகும். பொறி புலன்களுக்கு சலனத்தை விளைவித்து அதன் வழியே விஷயங்களுக்கு இழுத்துச் செல்லும்.

சித்தம் என்பது விரும்பியதைப் பெற நினைக்கும் உணர்வு. சித்தமும் மனமும் ஒரே வகையானது. 

அகங்காரம் மண்ணின் அம்சம். ஊனுடலை நான் என்று தீர்மானிக்கும் வடிவ விருத்தியே அகங்காரமாகும்.

செயல்களின் காரண காரியத்தின் அவசியத்தை ஆழ்ந்து ஆராயாமல் ஆலோசிக்காமல் நான் எனது என்கிற தீர்மானத்தில் முனைந்து கொண்டு பாவ புண்ணியங்களை செய்து கொண்டிருக்கும்.

தொடரும்....


Post a Comment

0 Comments


Comments

Ad Code

Responsive Advertisement