Recent Posts

Responsive Advertisement

பஞ்ச இயக்க விதிகள் - 4

பஞ்சபூதங்களின் அரசாட்சியில், காலங்கள் ஆறு ஆகும்.
அவை : 1. கார்காலம் - ஆவணி, புரட்டாசி 2. கூதிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை 
3. முன்பனிக் காலம் - மார்கழி, தை 4. பின்பனிக் காலம் - மாசி, பங்குனி
5. இளவேனிற் காலம் - சித்திரை, வைகாசி 6. முதுவேனிற் காலம் - ஆனி, ஆடி.

சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கத்தினால் (சுழற்சி), பூமியில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன.  இவற்றின் கிரணங்களினால் குளிர்ச்சி வெப்பங்களும் ஜீவ இனங்களில் ஏற்படும் வளர்ச்சி, ருசி, பருவகாலத் தேவைகள் என அந்தந்த காலங்களுக்கு ஏற்றபடி மாறுகின்றன. 
  

சுவைகள் : ஆறு. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு.

இனிப்பு சுவை மண்ணிலும் நீரிலும் இருக்கிறது.
புளிப்புச் சுவை மண்ணிலும் நெருப்பிலும் (தீ) இருக்கிறது.
உவர்ப்புச் சுவை தண்ணீரிலும் நெருப்பிலும் (தீ) ஏற்படுகிறது.
கசப்புச் சுவை காற்றிலும் ஆகாயத்திலும் உருவாகிறது.
காரச் சுவை தீயிலும் காற்றிலும் உண்டாகிறது.
துவர்ப்புச் சுவை மண்ணிலும் காற்றிலும் கிடைக்கிறது.

அதே போல, பஞ்ச பூதங்களையும் தமிழ் எண்களோடு பிரிக்கலாம்.
ஒன்று - பிருத்வியாகிய மண். - குரு
இரண்டு - அப்புவாகிய நீர் - சந்திரன், சுக்கிரன்
மூன்று - தேயுவாகிய நெருப்பு. - சூரியன், செவ்வாய், கேது
நான்கு - வாயுவாகிய காற்று. - புதன்
ஐந்து - ஆகாயமாகிய சுத்தவெளி. - சனி, ராகு.

இந்த ஐந்தின் வரிசைக்குள்ளே 247 எழுத்துக்களையும் அடக்கிவிடலாம்.
அட்டவணை பின்னர் தனிப்பதிவாக வரும்.

ஐந்தெழுத்து மந்திரம் என்பது பஞ்சபூத ரகசிய தந்திரம்.

இறைவனின் எழுத்து ஐந்து. ஐந்து தமிழ் எழுத்துக்கள் 242 எழுத்துக்களாக விரிந்து நிற்கும்.  தமிழ் மட்டுமல்லாது உலக மொழிகள் அனைத்திலும் கலந்து இருக்கும்.

ஒன்பது கோள்கள், 27 நட்சத்திரங்களையும் பஞ்சபூதங்களுக்கு பிரிக்கலாம்.

மண் - அசுவினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம்
நீர் - திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம்.
நெருப்பு - உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம்
காற்று - கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம்
ஆகாயம் - அவிட்டம், சதயம், பூரட்டாதி, ரேவதி.

பன்னிரெண்டு ராசிகளையும் பிரிக்கலாம்.
எண் .1 - மண் - ரிஷபம், கன்னி, மகரம்
எண் 2 - நீர் - கடகம், விருச்சிகம், மீனம்
எண் 3 -  நெருப்பு - மேஷம், சிம்மம், தனுசு
எண் 4 - காற்று - மிதுனம், துலாம், கும்பம்.
ஆகாயம் அனைத்து ராசிகளிலும் வியாபித்திருக்கும்.

ஆனால், பஞ்சபட்சி சாஸ்திரத்தில் மேஷம், விருச்சிகம், சிம்மம் இவை பிருத்வியாகிய வல்லூறு என்றும், மிதுனம், கடகம், கன்னி இவை நீராகிய ஆந்தை என்றும், தனுசு, மீனம் நெருப்பாகிய காகம் என்றும், துலாம், ரிஷபம் காற்றாகிய கோழி என்றும், மகரம், கும்பம் ஆகாயமாகிய மயில் என்றும் கூறுகிறது.

ஐந்தாம் பூதமாகிய ஆகாயம் இறை தத்துவம் கொண்டது. இது எங்கும் வியாபித்திருக்கக் கூடியது. இந்த பூதத்தின் குணம் கொண்டவர்கள், சாந்த சொரூபிகள். அனைவரும் இவர்களை விரும்புவர். இவர்கள் மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவர். 

பஞ்சபூதங்களுக்குரிய கிழமைகள் :- 
மண் - வியாழன்
 நீர் - வெள்ளி, திங்கள்
நெருப்பு - ஞாயிறு, செவ்வாய்
காற்று - புதன்
ஆகாயம் - சனி.

பஞ்சபூதங்களுக்குரிய திதிகள்:-
பிரதமை, சஷ்டி, ஏகாதசி - மண்
துவிதையை, சப்தமி, துவாதசி - நீர்
திருதியை, அஷ்டமி, திரயோதசி - நெருப்பு
சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி - காற்று
பஞ்சமி, தசமி, பய்ர்ணமி - ஆகாயம் 

பஞ்சபூதங்களுக்குரிய காலங்கள்.
முன்பனிக்காலம் - மண் - பனியாலும் குளிராலும் பூமியில் மாற்றங்கள் நிகழும் காலம்.
நீர் - இளவேனிற் காலம் - மரம் செடிகள் தழைத்து பூத்துக் குலுங்கும் காலம். சித்திரை, வைகாசி - சுக்கிரனுக்குரிய காலம்.
ஆவணி புரட்டாசி - கார்காலம் - சந்திரனுக்குரிய காலம். இக்காலங்களில் மழை பெய்யும். 
நெருப்பு - ஆனி, ஆடி - முதுவேனிற்காலம் - உஷ்ணத்தால் பூமியில் சில பாதிப்புகளைச் செய்யும். செவ்வாய்க்குரிய காலம்.
காற்று - ஐப்பசி, கார்த்திகை - குளிர்காலம் - பனியாலும் குளிராலும் அண்ட பிண்ட மாற்றங்கள் நிகழும் காலம். இது புதனுக்குரியது.
ஆகாயம் - சனி - மாசி பங்குனி - பின்பனிக் காலம். குளிரால் தேக மாற்றம், மரங்களில் பூக்கள் பூக்கும் காலமாகும்.

பஞ்சபூதங்களின் அடிப்படையில் உருவகப் படுத்தப் பட்ட பஞ்சபட்சி சாஸ்திரத்தில் சில மாற்றங்கள் இருக்கும். 
பஞ்சபட்சியின் தொழில்களை அரசு, ஊண், நடை, துயில், சாவு என்று குறிப்பிடப் பட்டிருக்கும்.
வளர்பிறை தேய்பிறைக் காலங்களிலும் பகல் பொழுது இரவுப் பொழுதுகளிலும் செய்யும் தொழில்களின் முறைகளிலும் சில மாற்றங்கள் இருக்கும். இவற்றினை பஞ்சபட்சி சாஸ்திர பாடங்களில் அறிந்து கொள்ளலாம். 
வளர்பிறை தேய்பிறைக் காலங்களில் நட்சத்திர அடிப்படையில் பட்சிகளும் மாறும் என்றும் மாறாது என்று இரு வேறு கருத்துகள் உண்டு.
இந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தினை திறம்பட கற்றுத் தெரிந்தால் அஷ்டகர்மங்களும் செய்யலாம் என்பர்.
பட்சி அறிந்தவனை பகைத்துக் கொள்ளாதே. சூழ் நிலைகளை மாற்றச் செய்யும் வல்லமையும் பஞ்சபட்சி அறிந்தவரிடம் உண்டு என்பர்.

பஞ்ச இயக்க விதிகளை இன்னும் விரிவாக விளக்க ஆரம்பித்தால், பதிவுகள் நீளும். எனவே, சுருக்கமாக பதிவு செய்தமையே போதுமென எண்ணி இப் பதிவுடன் பஞ்ச இயக்க விதிகள் பதிவினை நிறைவு செய்கிறேன்.

 நன்றி . வணக்கம்.

 வாழ்க வளமுடன்.


Post a Comment

0 Comments


Comments

Ad Code

Responsive Advertisement