Recent Posts

Responsive Advertisement

வேப்பிலை

வேப்பிலை
........................................
  வேப்பிலை எனும் 
பூலோக அமிர்தத்தின் பிறப்பை பற்றியும் 
வேறு எந்த மூலிகைக்கும் இல்லாத 
அதன் சிறப்பை பற்றியும் 
அகஸ்தியர் பெருமான் கூறும் விளக்கம்

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய 
இதன் விளைவாக சாகா நிலையை தரும் அமிர்தம் கிடைக்க
இந்த அமிர்தத்தை மகாவிஷ்ணு பெண் ரூபமாய் மாறி 
அழகிய மோகினியாக அவதாரம் தரித்து தேவர்களுக்கு இந்த அமிர்தத்தை பந்தி வைத்து பரிமாற

இதை பார்த்த அசுரர்களில் ஒருவன் அமிர்தத்தை எப்படியும் ருசித்து சாகாவரம் பெற வேண்டும் என விரும்பி தனது மாயா சக்தியால் தேவ ரூபம் தரித்து தேவர்களைப் போல பந்தியில் அமர்ந்திருக்க

தனது ஞான சக்தியால் இதை அறிந்த தேவர்களான சந்திரனும் சூரியனும் இதை மோகினியாய் மாறி பந்தியில் அமிர்தத்தை பரிமாறி வரும் மகாவிஷ்ணுவுக்கு உணர்த்த

இதை புரிந்துகொண்ட பகவான் மகாவிஷ்ணு சுவர்பானு எனும் அரக்கன் தேவரூபம் பெற்று பந்தியில் அமர்ந்திருப்பதை அறிந்து கொள்ள

தான் அசுரன் என்பதை மகாவிஷ்ணு அறிந்து கொண்டார் என்பதை சுவர்பானு உணர்ந்து கொண்டு உடனே அந்த அமிர்தத்தை வாயில் விட்டு விழுங்க

அமிர்தத்தை விழுங்கிவிட்டால் அசுரனுக்கு சாகாவரம் கிடைத்து விடுமே என்ற காரணத்தால் 

அமிர்தத்தை பந்தியில் பரிமாறி வந்த மகாவிஷ்ணு தான் வைத்திருந்த அகப்பையால் அந்த அசுரனின் தலையை வெட்டி விட

அசுரன் வாயிலிட்ட அமிர்தமானது அசுரனின் உடலுக்கு செல்லாமல் வாயிலிருந்து கீழே விழுந்து விட 

அந்த அமிர்தமே வேப்ப மரமாய்  வளர்ந்து பூலோக அமிர்தமாய் பூமியில் இருக்கிறது என்றும்

இந்த வேப்பிலையை எனும் அமிர்தத்தை முறைப்படி உட்கொண்டு வந்தால் பல தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் என்றும் 

சித்தர்களில் முதன்மை சித்தரான அகஸ்தியர் பெருமான்
சாகா வரத்தை தருகின்ற அமிர்தமே வேப்பிலை எனும் திருநாமத்தை பெற்று ஒரு அரிய வகை மூலிகையாக பூமியில் அவதரித்து இருப்பதாக இதன் சிறப்பை அகஸ்தியர் பெருமான் கூறியிருக்கிறார்

வேம்பு எனும் கற்ப மருந்தை உண்ணும் விதமும் அதனால் கிடைக்கின்ற பயனும்

  குறைந்தது நூறு ஆண்டை கடந்த முற்றிய வேப்பமரத்தின்

முதிர்ந்த இலை 
இளம் கொழுந்து இலை 
வேப்பம் பூ 
வேப்பம் பிஞ்சு 
வேப்பங்காய் 
வேப்பம் விதை
வேப்ப மரப்பட்டை

 இவைகளை தனித்தனியாக எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து பொடி செய்து அனைத்தையும் சம எடையாக  கலந்துகொண்டு 

இதன் எடைக்கு ஏழில் ஒரு பங்கு  வேப்பம் பழத்தின் பழ ரசத்தைப் சாறாக பிழிந்து இந்த பொடியோடு கலந்து நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து சலித்து இதை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு

 உப்பு புளி காரத்தை தவிர்த்து பத்தியம் காத்து வேப்ப மரத்தின் அட்டங்க பொடியை சாப்பிட்டு வர அனைத்து விதமான உடல் நோய்களும் தீரும்
 
வேம்பு கற்பத்தை முறையாக ஒரு மண்டலம் உட்கொண்டு வந்தால்

வண்டுகடி வாதவலி கணுச்சூலை எனும் மூட்டுவலி சன்னி சொறி சிரங்கு குஷ்டம் கைகால் முடக்கு சீத சன்னி தனுர்வாதம் பச்சை வாதம் பாரிசவாதம்சூலை விப்புருதி கட்டி வீக்கம் இவைகளோடு தீராத மேகம் வெள்ளை நோய் உடல் அரிப்பு தடிப்பு ஊரல் இவைகள் தீரும் மேலும் கடுமையான இருமல் விலகும்

நமது உடலானது இறுகி கற்தூனை  போல வலிமை பெறும் நாடி நரம்புகள் முறுக்கேறி சரீரத்தில் உள்ள நோய்கள் அனைத்தும் நீங்கும் முகத்திற்கு அழகு உண்டாகும்

வேப்ப மரத்தின் 
மருத்துவ பயன்களில் சில

முகத்திற்கு அழகு சேர்க்க

  ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கைப்பிடி வேப்பிலையை போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின் முகம் கழுவி வர முகத்தில் தோன்றிய பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும் முகமது கண்ணாடி போல் மின்னும் பார்ப்பதற்கு முகம் முன்பு இருந்ததை விட இப்பொழுது  அழகாக தோன்றும்

வயிற்று புழு நீங்க

 வேப்பம் கொழுந்தை மைபோல் அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் உட்கொண்டு வர வயிற்றில் உள்ள புழுக்கள் இறந்து வெளியேறிவிடும்இதனால் வாய்வு தொல்லை நீங்கும் வயிற்று உப்பிசம் குறையும்

புண்கள் ஆற

வேப்பம் கொழுந்து மஞ்சள் கிழங்கை இரண்டையும் சம அளவாக எடுத்து அரைத்து புண்கள் மீது தடவி வர சீக்கிரம் புண்கள் ஆறிவிடும் சேற்றுப் புண்கள் மீது பூச சேற்றுப்புண்கள் ஆறிவிடும்

அக்கி புண் குணமாக

  வேப்பிலை நெல்லிக்காய் இரண்டையும் மை போல அரைத்து அக்கி புண் மற்றும் அரிப்பு காயங்கள் உள்ள இடங்களில் தடவ இவை அனைத்தும் குணமாகும்

கண் வலி நீங்க
  
வேப்பிலையோடு சமமாக தோல் நீக்கிய சுக்கை சேர்த்து இதன் எடைக்கு நான்கில் ஒரு பங்கு இந்துப்பை கலந்து இதை அடுப்பிலிட்டு லேசாக சூடாக்கி வெதுவெதுப்பாக இருக்கின்ற பொழுது கண்களில் வைத்து கட்டி வர கண் வலி கண் அரிப்பு நீங்கும்

அஜீரண பேதி குணமாக

  ஒரு கைப்பிடி அளவு முதிர்ந்த வேப்பிலையை எடுத்து மண்பானையிலிட்டு நன்கு கருகும்படி வறுத்து தூள் செய்து இதில் மூன்று கிராம் எடுத்து சுட்டு பொடித்த வசம்பு தூளை இதன் எடைக்கு பாதி சேர்த்து இதை மோரில் கலக்கி குடித்துவர அஜீரணக் கோளாறால் ஏற்பட்ட அடிக்கடி பேதியாவது குணமாகும்

அம்மை நோய் நீங்க

  வேப்பிலை மற்றும் மஞ்சள் இரண்டையும் சமமாக எடுத்து நன்கு அரைத்து அம்மைப் புண் மீது பூசி வர புண்கள் ஆறிவிடும்

 வேப்பிலையும் மஞ்சளையும் அரைத்து ஒரு ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் கலந்து இதை அடுப்பில் வைத்து பாதியாகச் சுண்டக் காய்ச்சி காலை மாலை இருவேளையும் அருந்தி வர அம்மை நோய் குணமாகும்

என்றும் ஆரோக்கியமாய் வாழ

   கால் லிட்டர் தண்ணீரை முதல் நாள் இரவு நன்கு கொதிக்கவைத்து அதில் பதினைந்து வேப்பம் பூக்களை போட்டு மூடி வைத்திருந்து காலையில் இந்த நீரை வடிகட்டி குடித்துவர உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் ஆரோக்கியமும் அதிக பலமும் உண்டாகும்

தோல் நோய்கள் நீங்க

  வேப்பமரத்து உள் பட்டையை காயவைத்து இடித்து இதன் எடைக்கு சமமாக கடுக்காய்த் தூளை சேர்த்து இதில் மூன்று கிராம் எடுத்து வெந்நீரில் கலந்து தினம் இருவேளை முப்பது நாட்கள் சாப்பிட்டு வர தோல் நோய்கள் அனைத்தும் நீங்கும் கொடிய குஷ்ட நோயும் இதனால் குணமாகும்

பல்வலி குணமாக

  வேப்ப மரத்தின் வேரை இடித்து ஒரு கைப்பிடி எடுத்துக்கொண்டு  ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து இதை பாதியாக சுண்ட காய்ச்சி இந்த நீரால் வாய் கொப்பளித்து வர பல்வலி குணமாகும் வாய் துர்நாற்றம் அகலும்

வயிறு சுத்தமாக 
குடல் நோய்கள் அனைத்தும் குணமாக

  வேப்பெண்ணெய் விளக்கெண்ணெய் இரண்டையும் சம அளவாக கலந்து வைத்துக் கொண்டு மாதம் இருமுறை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை காலைவேளையில் இந்த எண்ணெயில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சாப்பிட்டு வர மலக்குடலில் உள்ள பூச்சிகள் இருந்து மலத்துடன் வெளியேறும் வயிறு சார்ந்த நோய்கள் அனைத்தும் தீரும் குறிப்பாக வாய்வுத் தொல்லை வயிற்று உப்பிசம் அஜீரணக் கோளாறுகள் அனைத்தும் விலகும்

பாத வெடிப்பு நீங்க

 இரவு வேளையில் கால் பாதத்திற்கு வேப்பெண்ணை தடவி வர பித்தத்தால் காலில் ஏற்படும் பித்த வெடிப்புகள் முழுமையாக நீங்கிவிடும்

தலைவலி நீங்க 
வேப்பம்பூ வைத்தியம்

நன்கு கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி காது வலி குணமாகும் 

நீராவியை வாய்வழியாக உள்ளிழுத்து வெளியே விட வரட்டு இருமல் தொண்டைப்புண் தொண்டை வலி நீங்கும்

குளிர் சுரம் குணமாக

  முதிர்ந்த வேப்பமரத்து பட்டையை கொண்டுவந்து மேற்புற நீயே நீக்கிவிட்டு உள்புறத்தில் உள்ள பட்டையை நிழலில் உலர்த்தி இடித்து சலித்து வைத்துக்கொண்டு இதில் மூன்று கிராம் எடுத்து காலை மாலை இருவேளையும் வெந்நீரில் கலந்து குடித்து வர குளிர் காய்ச்சல் குணமாகும்

வயிற்றுவலி குணமாக

வேப்பிலையோடு சீரகத்தை சம அளவாக சேர்த்து நன்கு அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து  கால் லிட்டர் தண்ணீரில் கலந்து இதை வடிகட்டி காலை வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுவலி குணமாகும்

சர்க்கரை நோயை சமப்படுத்த
             வேப்பிலை வைத்தியம்

ஓமம் சுக்கு வேப்பில்லை பனைவெல்லம் இவைகளை சம அளவாகக் பொடி செய்து ஒன்றாக கலந்து கொண்டு இரவு சாப்பாட்டிற்கு பின்பு இந்தப் பொடியில் ஐந்து கிராம் எடுத்து சாப்பிட்டுவிட்டு அதன் பின் பால் அருந்திவர படிப்படியாக சர்க்கரை நோய் குறைந்து சர்க்கரையின் அளவு சமநிலைக்கு வந்துவிடும் 

நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக

  வேப்ப மரத்தின் கொழுந்து இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்து சலித்து வைத்துக்கொண்டு இதை தினந்தோறும் காலை வேளையில் மூன்று கிராம் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து ஒரு மாதம் சாப்பிட்டு வர உடலில் உள்ள கடி விஷங்கள் அனைத்தும் நீங்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நோயின்றி வாழ இது ஒரு எளிய வழி முறையாகும்

Post a Comment

0 Comments


Comments

Ad Code

Responsive Advertisement