முருகன் 108 போற்றி
1. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.
2. ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.
3. அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.
4. இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது.
5. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.
6. தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.
7. தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம்.
8. அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.
9. இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் – ஒன்பது வருடம்.
10. அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார். இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர். இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக இன்னொரு துணுக்குத் தகவல் உண்டு.
11. அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று ஒரு புராண தகவல் உண்டு.
12. போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.
13. கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமை தான் என்பது பலரின் எண்ணம்.
14. தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது.
15. பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு துணுக்குத் தகவல் உண்டு.
===============================
பழனி முருகன் இரகசியம் தெரிந்து அலைமோதும் கூட்டம்...
ஒரு சொட்டு வியர்வை துளி குடிக்க விழுந்து கிடக்கும் பக்தர்கள்:
உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம் பழனியில்..!!
இரவில் வியர்க்கும் பழனி முருகன் சிலை
கார்த்திகை மாதம். ஐயப்ப பக்தர்கள் மாலை போடத் துவங்கி விடுவார்கள். ஐயப்பனைத் தரிசித்து விட்டு, அப்படியே, பிற ஆன்மீகத் தலங்களையும் தரிசிப்பது அவர்கள் வழக்கம்.
அப்படி, கூட்டம் கூட்டமாய் பழனிக்கும் வருவார்கள். இந்த சமயத்தில், பழனியில் உள்ள முருகன் சிலையின் அபூர்வ மகிமையைப் பற்றி, அவர்கள் தெரிந்து கொள்வதற்காக, தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி இதோ….!
அறிமுகம் ஏதும் தேவையில்லாத உலகப் பிரசித்தி பெற்ற ஊர் பழநி. திரு ஆவினன் குடி என்ற பழமையான பெயர் சிறப்பு கொண்ட இந்தப் பழநி மலை மேலே வீற்றிருக்கும் தண்டாயுதபாணி சிலை நவபாஷணம் என்ற ஒன்பது வகையான மூலிகைகளால் செய்யப் பட்டது.
போகர் சித்தர், தனது சீடர் புலிப்பாணி உட்பட மற்ற சீடர்களின் உதவியுடன் கன்னிவாடியில் உள்ள மெய் கண்ட சித்தர் குகையில் இந்த நவபாஷண சிலை செய்யப் பட்டுள்ளது.
லிங்கம், குதிரைப் பல், கார்முகில், ரச செந்தூரம், வெள்ளை பாஷணம், ரத்த பாஷணம், கம்பி நவரசம், கௌரி பாஷணம், சீதை பாஷணம் என ஒன்பது வகையான மிக ஆபூர்வமான மூலிகைகளைக் கொண்டு கடினப் பிரயாசையுடன் இந்த சிலையை உருவாக்கிய போகர், இந்த சிலையை வைக்க செவ்வாயின் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியாகத் தேடிய போது, அதற்கு பொருத்தமான இடம் இந்த பழனி மலை என்பதை தேர்வு செய்து, இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார்.
நவபாஷணம் என்ற இந்த தண்டாயுதபாணி சிலையின் பிரதான அம்சம், இரவில் இந்த சிலைக்கு வியர்க்கும். அது தான் இந்த நவபாஷண சிலையின் சிறப்பம்சம்!
அந்த வியர்வை பெருக்கெடுத்து ஆறாக ஓடும்!அந்த ஒவ்வொரு வியர்வைத் துளியிலும், அறிவியலை மிஞ்சும் மருத்துவத் தன்மை இருக்கிறது.
அதனால் தான், இங்கு தினந்தோறும் ராக்கால பூஜையின் போது, இந்த சிலை முழுவதிலும் சந்தனம் பூசப்படும்.மேலும், சிலைக்கு அடியில் ஒரு பாத்திரமும் வைக்கப் படும்.
மறுநாள் அதிகாலை சந்தனம் கலையப்படும் போது, அந்த சந்தனத்தில் வியர்வைத் துளிகள் பச்சை நிறத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும்.
கீழே வைக்கப் பட்ட பாத்திரத்திலும் வழிந்து வரும் வியர்வை நீரானது கேசகரிக்கப் படும்.இதனைக் கௌபீனத் தீர்த்தம் என்று சொல்கிறார்கள்.
இது உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம். இந்த சந்தனமும், கௌபீன தீர்த்தமும், அரு மருந்தாகக் கருதப் படுகிறது.
அதனால், இதைப் பிரசாதமாகப் பெறுவதற்காக, இந்த விபரம் தெரிந்தவர்கள் நூற்றுக் கணக்கில், காலை 4 மணிக்கு கோவிலில் குவிந்து விடுவார்கள்.கி.மு. 500- லிருந்தே இம் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன.
சங்க கால இலக்கியங்களில் பழனியைப் பற்றியும், பழனியை ஆண்ட மன்னர்களைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்த ஊரின் பழமையான பெயர் பொதினி.இப் பகுதியை ஆவியர்குடியைச் சேர்ந்த வேள் ஆவிக்கோப்பெரும்பேகன் என்ற மன்னர் ஆட்சி செய்துள்ளார்.
இப் பகுதியில் ஆவியர்குடி என்னும் தனி இனக் குழுவினர் மிகுதியாக இருந்துள்ளனர். எனவே அவர்களின் தலைவன் ஆவியர் கோமான் எனப் பெயர் பெற்றுள்ளான்.
அதனால் ஆவி நாடு என்றும், பின்னாளில் வைகாவூர் நாடு என்ற பெயரிலும் இப்பகுதி அழைக்கப் பட்டிருக்கிறது.
இன்றும் இந்த ஊரின் நடுவே உள்ள குளம், வையாபுரிக் குளம் என்றே அழைக்கப் படுகிறது.
தற்போது, மலை மீது காணப் படும் கோயில்; பிற்காலப் பாண்டிய மன்னர்களின் கட்டுமானப் பாணியில் உள்ளது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சேர மன்னர்களால் கோயிலின் திருப்பணிகள் துவக்கப் பட்டதாகக் கூறப் படுகிறது.
கோயில் கருவரையின் வடபுறச் சுவரில் உள்ள சடையவர்மன் வீரபாண்டியன் கல்வெட்டு, கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்டிருக்கலாம் எனக் கருதப் படுகிறது.
கருவறைச் சுவர்களில் உள்ள நான்கு கல்வெட்டுக்களில் ஒன்று கிருஷ்ண தேவராயர் காலத்தைச் சார்ந்தது (கி.பி. 1520). இந்தக் கல்வெட்டில் தான் ஸ்ரீபழனிமலை வேலாயுதசாமி எனப் பெயர் இடம் பெற்றுள்ளது.
மற்ற கல்வெட்டுகள் இங்குள்ள மூலவரை இளைய நயினார் (சிவபெருமானின் இளைய மகன்) என்றே சுட்டிக் காட்டுகின்றன.விஜயநகர மன்னர் மல்லிகார்ஜூனர் காலத்தில் (கி.பி. 1446), அவரது பிரதிநிதியாக அன்னமராய உடையார் என்பவர் இந்தப் பகுதிக்கு நிர்வாகியாக இருந்துள்ளார்.
அந்தக் காலத்தில் மூன்று சந்தி கால பூஜைக்கும் திருவமுது, நந்தா விளக்கு, திருமாலை, திருமஞ்சனம் சாத்துவதற்கான செலவுகளுக்காக ரவிமங்கலம் என்ற ஊர் நன்கொடையாக வழங்கப் பட்டிருக்கிறது.
இந்த ரவிமங்கலத்தில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டியர் காலப் பாடல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப் பட்டு, தற்போது, அந்தக் கல்வெட்டு பழனி அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளது.
இந்தப் பழனி மலைக் கோயிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.ஊருக்கு வட மேற்கே உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலும் மிகப் பழமையானது.
பிரசித்தி பெற்றது. தமிழ் நாட்டிலேயே ரோப் கார், மற்றும் வின்ச் எனப் படும் மலை இழுவை ரயிலும் பக்தர்களின் வசதிக்காக இங்கு மட்டும் தான் அமைக்கப் பட்டிருக்கிறது.
அறிவியல், விஞ்ஞானம் ஒரு புறம் வளர்ச்சி அடைந்தாலும், அதையும் தாண்டி ஆன்மீகமும் வளர்ந்து கொண்டிருப்பதற்கு, இங்கு வரும் பக்தர்களின் கூட்டமே சாட்சி!..
===============================
முருகன் 108 போற்றி!!!
ஓம் ஆறுமுகனே போற்றி
ஓம் ஆண்டியே போற்றி
ஓம் அரன் மகனே போற்றி
ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி
ஓம் அழகா போற்றி
ஓம் அபயா போற்றி
ஓம் ஆதிமூலமே போற்றி
ஓம் ஆவினன் குடியோய் போற்றி
ஓம் இறைவனே போற்றி
ஓம் இளையவனே போற்றி (10)
ஓம் இடும்பனை வென்றவனே போற்றி
ஓம் இடரைக் களைவோனே போற்றி
ஓம் ஈசன் மைந்தனே போற்றி
ஓம் ஈராறு கண்ணனே போற்றி
ஓம் உமையவள் மகனே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஐயனே போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
ஓம் ஒன்றே போற்றி
ஓம் ஓங்காரனே போற்றி (20)
ஓம் ஓதுவார்க்கினியனே போற்றி
ஓம் ஔவைக்கருளியவனே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கதிர் வேலவனே போற்றி
ஓம் கந்தனே போற்றி
ஓம் கடம்பனே போற்றி
ஓம் கவசப்பிரியனே போற்றி
ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
ஓம் கிரிராஜனே போற்றி
ஓம் கிருபாநிதியே போற்றி (30)
ஓம் குகனே போற்றி
ஓம் குமரனே போற்றி
ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி
ஓம் குறத்தி நாதனே போற்றி
ஓம் குரவனே போற்றி
ஓம் குருபரனே போற்றி
ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
ஓம் சஷ்டி நாயகனே போற்றி
ஓம் சரவணபவனே போற்றி
ஓம் சரணாகதியே போற்றி (40)
ஓம் சத்ரு சங்காரனே போற்றி
ஓம் சர்வேஸ்வரனே போற்றி
ஓம் சிக்கல்பதியே போற்றி
ஓம் சிங்காரனே போற்றி
ஓம் சுப்பிரமணியனே போற்றி
ஓம் சுரபூபதியே போற்றி
ஓம் சுந்தரனே போற்றி
ஓம் சுகுமாரனே போற்றி
ஓம் சுவாமிநாதனே போற்றி
ஓம் சுருதிப் பொருளுரைத்தவனே போற்றி (50)
ஓம் சூழ் ஒளியே போற்றி
ஓம் சூரசம்ஹாரனே போற்றி
ஓம் செல்வனே போற்றி
ஓம் செந்தூர்க்காவலனே போற்றி
ஓம் சேகரனே போற்றி
ஓம் சேவகனே போற்றி
ஓம் சேனாபதியே போற்றி
ஓம் சேவற்கொடியோனே போற்றி
ஓம் சொற்பதங்கடந்தவனே போற்றி
ஓம் சோலையப்பனே போற்றி (60)
ஓம் ஞானியே போற்றி
ஓம் ஞாயிறே போற்றி
ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
ஓம் ஞானோபதேசியே போற்றி
ஓம் தணிகாசலனே போற்றி
ஓம் தயாபரனே போற்றி
ஓம் தண்டாயுதபாணியே போற்றி
ஓம் தகப்பன் சாமியே போற்றி
ஓம் திருவே போற்றி
ஓம் திங்களே போற்றி (70)
ஓம் திருவருளே போற்றி
ஓம் தினைப்பணம் புகுந்தோய் போற்றி
ஓம் துணைவா போற்றி
ஓம் துரந்தரா போற்றி
ஓம் தென்பரங்குன்றனே போற்றி
ஓம் தெவிட்டா இன்பமே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் தேவசேனாபதியே போற்றி
ஓம் தேவனே போற்றி
ஓம் தேயனே போற்றி (80)
ஓம் நாதனே போற்றி
ஓம் நிமலனே போற்றி
ஓம் நிறணந்தவனே போற்றி
ஓம் பிரணவமே போற்றி
ஓம் பரப்பிரம்மமே போற்றி
ஓம் பழனியாண்டவனே போற்றி
ஓம் பாலகுமாரனே போற்றி
ஓம் பன்னிரு கையனே போற்றி
ஓம் பகை ஒழிப்பவனே போற்றி
ஓம் போகர் நாதனே போற்றி (90)
ஓம் போற்றப்படுவோனே போற்றி
ஓம் மறை நாயகனே போற்றி
ஓம் மயில் வாகனனே போற்றி
ஓம் மகா சேனனே போற்றி
ஓம் மருத மலையானே போற்றி
ஓம் மால் மருகனே போற்றி
ஓம் மாவித்தையே போற்றி
ஓம் முருகனே போற்றி
ஓம் மூவாப் பொருளே போற்றி
ஓம் யோக சித்தியே போற்றி (100)
ஓம் வயலூரானே போற்றி
ஓம் வள்ளி நாயகனே போற்றி
ஓம் விறலிமலையானே போற்றி
ஓம் வினாயகர் சோதரனே போற்றி
ஓம் வேலவனே போற்றி
ஓம் வேதமுதல்வனே போற்றி
ஓம் கலியுக வரதனே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி (108)
முருகனுக்கு அரோகரா!!!
==================================
நவபாஷாணம்
நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள்.
நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்தர்கள் முறைப்படி கட்டுவதாகும்.
பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.
ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு.
அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள்.
🌹🌹🌹🌹🌹💜🌹🌹🌹🌹🌹
*ஒன்பது பாஷாணங்கள்*
🌹🌹🌹🌹💜🌹🌹🌹🌹🌹🌹
*1.சாதிலிங்கம்.*
*2.மனோசிலை*
*3.காந்தம்*
*4.காரம்*
*5.கந்தகம்*
*6.பூரம்*
*7.வெள்ளை பாஷாணம்*
*8.கௌரி பாஷாணம்*
*9.தொட்டி பாஷாணம்*
இந்த நவ பாஷாணத்தின் தன்மையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன.
நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமான விஷயமாகும். நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.
தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.
பழனி மலைக்கோவில்,
கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில்.
மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது,
இதில் இரண்டு போகர் உருவாக்கியவை. தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.
நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவத்தை உடையது; நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுத பாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாண முருகர் சிலையை உருவாக்கினார். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.🙏🙏🙏🙏
0 Comments