*மெளனம் ஒரு மகத்தான சக்தி*
.......................................
ஒரு பேச்சு சொல்லாத எத்தனையோ செய்திகளை, ஒரு மெளனம் சொல்லி விடும்......
மெளனம் ஒரு மகத்தான சக்தி....!!!!
மெளனத்தின் சக்தியை உணர்ந்தவர்கள், அதை தங்கள் வாழ்வில் உபயோகித்து வெற்றி கண்டு இருக்கிறார்கள்....!!!!
எப்போது பேசாமல் மெளனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பது நல்லது.....
ஆனால், அதை விட *எதை, எப்போது பேசவேண்டும்....
எப்படி பேச வேண்டும் என்றெல்லாம் தெரிந்து வைத்திருப்பது மிக அவசியம்.....!!!!!
ஒரு மனிதனைத் தாக்கும் மிகப்பெரிய ஆயுதம், அவனுக்குப் பிடித்தவரின்* *மெளனம் தான்.....*
*மெளனம. சாதிப்பது கொடியவனுக்கே ஊக்கமளிக்கும்....
*கொடுமைக்கு உள்ளாகிறவனுக்கு ஊக்கமளிக்காது....
பல நேரங்களில் மெளனம் நிறையச் செய்திகளை எளிதாகச் சொல்லி விடுகிறது.....!!!?
*அதே நேரத்தில் வாயை மூடிக் கொண்டு பேசாமலே இருப்பது உண்மையான மெளனம் இல்லை....
*அதாவது அக,புற மனதினில் அமைதியான முறையில் கடைப்பிடிக்கப்படும்*மெளனமே மிகச் சிறந்ததாகும்.....!!!!!
ஒவ்வொரு நாளும் நாம் பலரிடம் பேசுவது அவசியமாகிறது.....
*நாள்தோறும் பிறரிடம் பேசுவதால் களைப்படைகிறது....
சில வேளைகளில், மனம்* *பாதிப்படையலாம்....
*அமைதியை இழக்க நேரலாம்....!!!
*ஆம் தோழர்களே...*
*நாள் தோறும் குறைந்தபட்சம் பத்து நிமிடம்* *மெளனத்தைக் கடைப்பிப்பது முக்கியம்....!!!!*
*அவ்வாறு செய்வதால் ஒருவர் தம்மை நிலைப்படுத்துகிறார்...!!!!*
*அதனால் அவர் அன்றைய நாளில் நிகழ்ந்த* *அனைத்தைப் பற்றியும் அமைதியாகவும்*, *தெளிவாகவும் யோசிக்க முடிகிறது...*
*தேவையான சமயத்தில் மெளனமாக* *இருப்பது மூலமே மகத்தான* *செயல்களை சாதிக்க முடியும்..!!!!✍🏼🌹*
0 Comments