*இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை*
உப்பு சேர்க்காமல் எலுமிச்சம் பழம் சாற்றை 1டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்கவும்
10 பூண்டை பாலில் கலந்து கொதிக்க வைத்து பூண்டை மட்டும் சாப்பிடவும்
முதல் நாள் ஊற வைத்த வெந்திய தண்ணீரை மறுநாள் ஒரு டம்ளர் அளவில் வெறும் வயிற்றில் குடிக்கவும்
5 சின்ன வெங்காயம் பச்சையாக காலையில் சாப்பிடவும்
பெரிய நெல்லிக்காய் தினமும் ஒன்று சாப்பிடவும்
வாரம் மூன்று நாட்கள் பீட்ரூட் ஜூஸ் குடிக்கவும்
கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி பழங்களை தினமும் ஒன்று சாப்பிடவும்
வாழைப்பழம் தினமும் ஒன்று சாப்பிடவும்
நார்ச்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள் கீரை வகைகளை சாப்பிடவும்
வாரம் இரண்டு நாட்கள் முருங்கைக்கீரை, சின்ன வெங்காயம் சூப் செய்து சாப்பிடவும்
தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி செய்யவும்
செம்பருத்தி பூவை தினமும் மூன்று சாப்பிடவும்
மாதுளம் பழம் சாப்பிடவும்
மஞ்சள் தூளை பாலில் கலந்து குடிக்கவும்
கருவேப்பிலையை தினமும் இரண்டு கொத்து சாப்பிடவும்
கொதிக்க வைத்த சீரக தண்ணீரை தினமும் இரண்டு டம்ளர் பருகவும்
இஞ்சி , இலவங்கம், 2 டம்ளர் தண்ணீர், 2 பூண்டை கொதிக்க வைத்து அவற்றுடன் அரை ஸ்பூன் தேன் மற்றும் அரை எலுமிச்சம்பழத்தை கலந்து வாரம் ஒரு நாள் குடிக்கவும்
*இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியது*
உப்பை தவிர்க்க வேண்டும்
ஊறுகாய்
அப்பளம்
பீசா பர்கர்
ஐஸ்கிரீம்
நூடுல்ஸ்
சாஸ் சாக்லேட்
உப்பு சேர்த்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்
கருவாடு
துரித உணவுகள்
கிரீம் மிகுந்த கேக் வகைகள்
எண்ணெய்யில் வறுத்த உணவுகள்
சிகரெட் மது கொழுப்பு அதிகம் உள்ள மாமிசம்
சோடா உப்பில் தயாரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
🟥🟥🟥👇🟨🟨🟨
*நோயற்ற வாழ்வே*.. *குறைவற்ற செல்வம்*.. *நோயின்றி வாழ கற்றுக் கொள்வோம்*...
🟨🟨🟨👇🟥🟥🟥
*இரத்தக்_குழாய்_அடைப்பு_நீங்க*……
*இயற்கை_மருத்துவம்*.
❤ இரத்த குழாயில் கொழுப்பு, ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் அது பலவகையான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இதயத்திற்கும், மூளைக்கும் இரத்தம் மற்றும் தேவையான சத்துக்களை கொண்டு செல்லும் இரத்த நாளங்கள் இதயத்தை போலவே சுருங்கி விரியும் தன்மை கொண்டது. அதனால் தான் அவற்றில் இரத்தம் ஓட்டம் நடைபெறுகிறது. இரத்தம் குழாய்கள் உற்பத்தி குறையும்போது இரத்த குழாய் சுருங்கி விரிவது குறையும். அப்பொழுது இரத்த குழாய்களில் கொழுப்பு படியதொடங்கும். கொழுப்பு சேர்ந்து குழாயை அடைத்துவிடும், இதனால் மாரடைப்பு பக்கவாதம் ஏற்படக்காரணமாகிறது.
இரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
நாம் உண்ணும் உணவின் மூலம் இந்த இரத்த குழாய் அடைப்பு பிரச்சனையை சரி செய்து விட முடியும். அதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க…
*இரத்தக் குழாய் அடைப்பு நீங்க*…
(Heart blood vessels blockage treatment)
*தினமும் இதை செய்யுங்க*.👇
இதயம் பலப்பட ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேரமாவது மெதுவான வேகத்தில் 🚶♂நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும் இதயத்தில் ஏற்படும் இரத்த அடைப்பை குணப்படுத்தும் சில இயற்கை முறைகளை பற்றி பார்ப்போம்.
*இதய அடைப்பை குணப்படுத்தும் முறைகள்*❓❗
💗தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை பருகினால் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.
💗 உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்த இதய நோய் குணமாகும்.
💗சுருங்கிய இதய வால்வுகளில் இரத்தம் எளிதாக சென்று வர வெங்காயம் பெரிதும் உதவுகின்றது. எனவே தினமும் 25 கிராம் முதல் 50 கிராம் வரை வெங்காயத்தை எடுத்து கொண்டால் அது உடலில் உள்ள கொழுப்பை கொஞ்சம் கொஞ்சமாககரைத்து இதய வால்வின் அடைப்பையும் குணப்படுத்தும்.
💗இதய வால்வுகளில் உள்ள அடைப்பு நீங்கி மீண்டும் இரத்த குழாயில் அடைப்பு வராமலும் தடுக்க தினமும்
5 பல் பூண்டினை பாலில் கலந்து பருகி வர வேண்டும்.
💗1 கப் எலுமிச்சை சாறு, 1 கப் இஞ்சிச் சாறு, 1 கப் புண்டு சாறு, 1 கப் ஆப்பிள் சைடர் விநிகர் எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன், சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து பாட்டலில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்பூன் அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும் நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து தப்பிக்க சிறந்த வழிமுறையாகும்.
💗இதய வால்வு அடைப்பு பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபட தினமும் ஒரு கப் மோர் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
💗இதய வால்வு அடைப்புக்கு இஞ்சி ஒரு நல்ல மருந்து. எனவே இஞ்சி சாருடன் தேன் எலுமிச்சை சாறு சர்க்கரை கலந்து தினமும் அருந்தினால் இதய வால்வு அடைப்பு நீங்கும்.
.
❤ இதயஅடைப்பு நீங்க மருந்து ❤
இதய அடைப்பு, இதயவலி, மற்றும் இதயம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் நீக்கும் மருந்து.
👉 *தேவையானபொருள்*
வெண்தாமரை இலை – 4 பங்கு
ஆடுதிண்ணாபாளை வேர் – 1 பங்கு
👉செய்முறை❓
வெண் தாமரை இலையை நன்றாக நிழலில் உலர்த்திவைத்துகொண்டு அதன் பின் மிருகசீரிடம் நட்சத்திரம் வரும் நாளில் (பகல் வேளையில்) ஆடுதிண்ணாப்பாளை செடியின் முன் நன்றி கூறி அதன் வேரை எடுத்து தாமரை இலையுடன் நன்றாக இடித்து பொடித்து வைத்துக்கொண்டு காலை மற்றும் இரவு 1 ஸ்பூன் தேனில் குழப்பி சாப்பிட வேண்டும்.
இதய அடைப்பு உள்ளவர்கள் மூன்று வேளையும், 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வாரம் மூன்று நாட்கள் சாப்பிட்டால் இதயநோயே வராது.
.
*இதய படப்படப்பு நீங்க செம்பருத்தி*
செம்பருத்திப்பூ – 10 எண்ணிக்கை
மிளகு – 5
ஏலக்காய் – 2
ஒரு 400 ml நீரில் செம்பருத்திப்பூ, மிளகு, ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து 100மிலியாக சுண்ட காய்ச்சி அதிகாலையில் அருந்த இதய படபடப்பு, இதய வலி, இதய வால்வுகளில் அடைப்பு, ரத்த அழுத்தம் ஆகியவை குணமாகும்.
செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, தாமரைப்பூ ஆகியவற்றை சம அளவு கலந்து கொதிக்க வைத்து அதிகாலையில் சாப்பிட இதய நோய் தீரும்.
.
*இரத்தக் குழாய் அடைப்பு நீங்க*
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் 1 1/2 டம்பளர் தண்ணீர் ஊற்றி அதனுடன் இடித்த இரண்டு பற்கள் பூண்டு மற்றும் சிறிதளவு இஞ்சி, சிறிதளவு இலவங்கப்பட்டை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து கொள்ளவும்.
இறுதியாக பானத்தை அடுப்பில் இருந்து இறக்கும் போது அரை எலுமிச்சை பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இந்த பானத்துடன் சேர்த்து கொள்ளவும்.
மிதமான சூட்டில் பானத்தை வடிகட்டி அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, காலை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் வரை அருந்தி வர இரத்த குழாயில் சேரும் கொழுப்புகள் மற்றும் அடைப்புகள் நீங்கும்.
💗அதேபோல் தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வர இரத்த குழாய் அடைப்பு நீங்கும். மேலும் கொதிக்க வைத்து ஆறவைத்த நீரில் சீரகம் பொடியை சேர்த்து 12 மணி நேரம் ஊறவைத்து குடித்தால் இரத்த அழுத்தம் நீங்கும்.
💗ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சை பழம் சாற்றை பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீராகும்.
💗அகத்திக்கீரையை வாரம் இரண்டு முறை சமைத்து சாப்பிட்டு வர இரத்த அழுத்தம், இரத்த குழாய் அடைப்பு போன்றவை குணமாகும்.
💗கருவேப்பிலையை நன்கு அரைத்துப் சாறு எடுத்து கொள்ளவும். இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகி வர இரத்த குழாய் அடைப்பு நீங்க ஆரம்பிக்கும்.
💗இதய வால்வுகளில் உள்ள அடைப்புகள் நீங்கி மீண்டும் இரத்த குழாயில் அடைப்புகள் வராமல் இருக்க, 5 பூண்டு பற்களை இடித்து பாலுடன் கொதிக்க வைத்து அருந்துங்கள்.
.
*ரத்தக் கொதிப்பு நீங்க.*..
💗ரத்த அழுத்தமே (இல்) இரத்தக் கொதிப்பு எனப் படுகிறது. ஒருமுறை ரத்த அழுத்த நோய்க்கு ஆட்பட்டுவிட்டால், வாழ்நாள் முழுக்க இந்நோய் நம்முள் இருந்துகொண்டேதான் இருக்கும். ரத்த அழுத்தத்தை ஒரே சீராய் வைத்துக் கொள்ள மருத மரம் நமக்கு வழிகாட்டுகிறது.
💗மருதமரப் பட்டை 200 கிராம்,
சீரகம் 100 கிராம்,
சோம்பு 100 கிராம்,
மஞ்சள் 100 கிராம்
இவற்றை ஒன்றாகத் தூள் செய்து பத்திரப் படுத்தவும். இதில் ஐந்து கிராம் அளவில் எடுத்து, இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்யவும். இதை காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டுவர, ரத்த அழுத் தம் இருந்த சுவடே இல்லாமல் மறையும்.
.
❤இதயநோய் குணமாக...❤
💗இதய நோய்களை மிக எளிதில் குணமாக்கும் வல்லமை மருத மரத்திற்கு உண்டு. இதய நோய்களுக்கு உண்டு வரும் நவீன மருந்துகளுடன், மருதம் சார்ந்த மருந்துகளைச் சாப்பிட்டு வரலாம். மருத மரம் வீரியமான ரசாயனமல்ல என்பதை உணர்ந்து கொண்டீர்களானால் கண்டிப்பாகச் சாப்பிடத் தயங்கமாட்டீர்கள்.
💊மருதம்பட்டை,
தாமரைப்பூ வகைக்கு 200 கிராம்.
ஏலக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, இலவங்கப் பட்டை வகைக்கு 20 கிராம்.
இவற்றையெல்லாம் ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவு காலை, இரவு என இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டுவர, இதய பலவீனம், இதயத்தில் உண்டாகும் வலி, இதய வீக்கம், இதயக் குழாய் களில் உண்டாகும் அடைப்பு போன்றவை அதிசயமாய் நீங்கும்.
மேற்சொன்ன மருந்தையே கசாயமிட்டும் சாப்பிட்டு வரலாம். கடைகளில் கிடைக்கும் மருத மரம் சார்ந்த மருந்துகளையும் வாங்கி உபயோகிக்கலாம். நம் பண்டைய ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படும் "அர்ஜுனா அரிஸ்டம்' என்ற திரவ மருந்து மருந்துக் கடைகளில் தாராளமாய்க் கிடைக்கிறது. இதில் 20 மி.லி. அளவு காலை, இரவு என இருவேளையும் சாப்பிட்டு வர, இதய நோய்கள், ரத்தம் சார்ந்த நோய்கள் உடனே தீரும்.
#தொப்பையை_குறைக்க_உதவும்_சலபாசனம்...!
சலபாசனம் வயிற்றுக்கும் வயிற்றுக்கு உள்ளிருக்கும் குடல், இரைப்பை, பித்தப்பை முதலிய முக்கிய அங்கங்களுக்கும் உயிர் வீர்யத்தை தரும் அதியற்புதமானது. மானிட விரோதியாகிய மலச்சிக்கலை அடியோடு அகற்றும்.
வயிறு பெரிதாக இருக்கும் பெண்கள், ஆண்கள் இந்த ஆசனப் பயிற்சியை மேற்கொண்டால் அவர்கள் வயிறு சாதாரண நிலைக்கு வர ஆரம்பிக்கும்.
#செய்முறை:
குப்புறப் படுத்து முகத்தை விரிப்பில் தாழ்த்தி வைத்துக் கொள்ளவும். இரு கைகளையும் குப்புற மூடிய நிலையில் அடி வயிற்றின் கீழ் வைத்துக் கொள்ளவும், மூச்சை உள்ளே இழுத்து அடக்கி வயிற்றை இறுக்கிக் கொள்ளவும். கைகளை தரையில் அழுத்தியவாறு கால்களை விறைப்பாக வைத்துக் கொண்டு படத்தில் காட்டியவாறு மேலே தூக்கவும். ஒரு முறைக்கு ஐந்து முதல் பத்து வினாடியாக மூன்று முறை செய்யவும் மிக மெதுவாக உயரே தூக்கி இறக்க வேண்டும். ஆரம்பத்தில் ஓவ்வொரு காலாக தூக்கி பழகலாம்.
#பலன்கள்:
வயிற்றுப் பகுதி பலப்படும். பெருங்குடல், சிறு குடல் இழுக்கப்பட்டு நன்கு வேலை செய்யும். மலச்சிக்கல் தீரும், கல்லீரல், மண்ணீரல், கணையம் நன்கு வேலை செய்யும். ஜீரணம், வயிற்று வலி நீங்கும். முதுகு இடுப்பு வலி நீங்கும். அடிவயிறு இழுக்கப்பட்டு தொந்தி கரையும். முதுகெலும்பு நோய் குணமாக முக்கிய ஆசனம்.
#நன்றி : #வெப்துனியா
0 Comments