Recent Posts

Responsive Advertisement

Take care

*மனிதனின் ஆயுட்காலம் குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள் பின்வருவனவையே ஆகும்...*

1. உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை
2. இரவில் கண் விழித்திருத்தல்
3. காலை உணவை தவிர்த்தல்.
4. ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம்.
5. பணத்தை நோக்கிய ஓட்டம்
6. பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல்
7. கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல்.

வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள். கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல.

*நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது*

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சூடாக நீர் அருந்துங்கள்.

தினமும் ஒரு பழத்தையேனும் வெறும் வயிற்றில் உண்ணுங்கள்.

போதியளவு நீர் அருந்துங்கள்.

 *இளநீர் போன்றவை மிக நல்லது*

பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரிப் பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினமும் உண்ணுங்கள்.

காலை உணவை தவிர்க்காது ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்ணுங்கள்.

அளவாக உண்ணுங்கள்.

எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.

 தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு இருப்பதை குறையுங்கள்.

உடற்பயிற்சி உணவை போல் அத்தியாவசியமான ஒன்று.

 மூன்று வேளை உண்பதால் இரண்டு வேளை அவசியம் 20 நிமிடம் நடை பயிற்சி செய்யுங்கள்.

இறுக்கமாக இருக்காது சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருங்கள்.

 உங்கள் வட்டத்தை இயந்திரத்தோடு குறுக்கிக் கொள்ளாதீர்கள். 

*அழுது வடியும் சீரியல்களை பார்த்து உங்கள் இதயத்தை வாட்டாமல், சிரிக்க வைக்கும் காட்சிகளை கண்டு களியுங்கள்*

ஆளைக் கொல்லும் கவலைகளைப் புறந்தள்ளி ஆளுமையைத் தரும் தன்னம்பிக்கையை ஆடையாக அணியுங்கள்.

வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
அதை மகிழ்வாய் வாழ முயற்சி செய்யுங்கள்.

 நலமுடன் வாழ்க!


Post a Comment

0 Comments


Comments

Ad Code

Responsive Advertisement