1) பேரன்/ பேத்திகளை ஸ்கூலுக்கு அனுப்புவது, அழைத்து வருவது.
2)TV/mobile ல்ல பாலிடிக்ஸ், sports, வம்பு.
3) கிச்சன்ல எடுபிடி வேலை.
4)துணி உலர்த்துவது/காய்ந்த பின் எடுத்து வருவது.சில சமயம் மடித்து வைப்பது.
5) வீட்டுல repair செய்யும் ஆட்கள்,Gas, courier வரும்போது வீட்டில் இருப்பது.
6)தான் உண்டு.தன் வேலை உண்டு என்று இருப்பது.
7) என்ன செஞ்சாலும் பொண்டாட்டியிடம் திட்டு வாங்குறது.
8) அத்தனை பேர் வீட்டில் இருந்தாலும் கால்பெல் அடித்தால் நாம் தான் போய் திறந்து விடுவது.
.9) வாக்கிங் போகிறேன் என்ற பெயர் வழியில் நைசாக பஜ்ஜி போண்டா சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு ஏதாவது சாமான் வாங்கி வருவது.
10) பாத்ரூம் போனால் லைட் மற்றும் ஃபேன் உபயோகித்தால் அணைக்காமல் வந்து மனைவியிடம் திட்டு வாங்குவது.
11) பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது,
12) மனைவியிடம் மற்றும் குழந்தைகளிடமும் நல்லபடியாக வைத்துக் கொள்ள இறைவனிடம் பூஜை செய்வது.
13) பேங்க், போஸ்ட் ஆபீஸ் தபால் கரணை போல் வேலை பார்ப்பது.
14) அம்மாவுக்கும் மனைவிக்கும் இடையில் அம்பயரின் வேலை பார்ப்பது.
இனி 60+ இளைஞர்கள் செய்யவேண்டியன..
*1. விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் உறவினர்கள் வீடுகளுக்கு செல்லுங்கள்.*
*2. எப்போதும் எதிர்காலத்தைப் பற்றியே சிந்திக்காதீர்கள்.*
*3. உறவினர்களை தங்களது வீட்டுக்கு வரச் சொல்லி முழு மனதுடன் அழைப்பு விடுங்கள்.*
*4. சாலைகளில் நடக்கும் போது தலையை நிமிர்ந்து நடந்து செல்லுங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களை பார்த்தால் புன்னகை செய்து குடும்ப நலங்களை விசாரியுங்கள்.*
5.வீட்டுக்குள்ளேயே இருந்து வாழ்க்கையை கழிக்காதீங்க பிற்காலத்தில் உதவிக்கு யாரும் வராமல் மன நோயாளியாக ஆக நேரிடும்.*
*6. தங்களுடைய திறமைகள் அடுத்தவர்களுக்கு பயனுடையதாக இருக்க வேண்டும்.*
*7. வாரம் ஒருமுறையாவது குடும்பத்துடன் அருகில் இருக்கும் கோயில்களுக்கு செல்லுங்கள்.*
*8. சொத்து, தங்கம் மற்றும் பணத்தை நினைத்து, நினைத்து டென்சன் ஆகாதீங்க.*
*9. ஒரு நாளைக்கு பத்து முறையாவது சிரிங்க.😀😀😀*
*10. நான் பெரிய ஆள், (ஈகோ) எனது கட்டளைக்கு அனைவரும் கட்டு பட வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடுங்க இல்லையேல் உங்கள் மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், வேலை ஆட்கள் உங்களுடன் போலியாகத்தான் பழகுவார்கள்.*
*11. வங்கியில் பணத்தை சேர்ப்பதை தவிர்த்து முடிந்த அளவு தானம், தர்மம் செய்து புண்ணியத்தைச் சேர்க்க பழகிக் கொள்ளுங்கள்.*
*12. உங்களுக்கு உள்ளேயே ஒரு வட்டம் போட்டு வாழ்க்கையை வாழாதீங்க.*
*13. மரண பயத்தை துச்சமென நினையுங்கள். இன்னும் சில மணிநேரம், சில நாட்கள், சில மாதம், சில ஆண்டுகளில் இந்த புண்ணிய பூமியை விட்டு போய் விடுவோம் என்ற எண்ணத்தில் (ஞானிகளைப் போல) வாழப் பழகுங்கள்.*
*14. இந்த வீடு, சொத்து, கார், தொழில், பணம், செல்வாக்கு, உடன் பிறந்தவர்கள், சொந்தங்கள், வேலையாட்கள், அதிகாரம், பதவி இவை அனைத்தும் உங்களுடன் வராது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.*
*15. உடற்பயிற்சி, தியானம் செய்து உடலை பாதுகாப்பாக வையுங்கள்.*
*16. வாழ்க்கையில் ஓர் நோக்கம் வேண்டும். அது இல்லாமலேயே ஏனோதானோ என்று இருக்கக் கூடாது.*
*17. இதைப் படித்துவிட்டு இவன் முதல்ல கடைப்பிடிக்கிறானா என்று நினைக்காதீங்க. எனக்கும் இந்த வயதில் இந்த சிந்தனைகள் பொருந்தும்.*
*18. இந்த ஆன்மா பூமிக்கு வந்த நோக்கம் என்ன என்பதை தெரிந்து சிந்தித்து செயல் படுங்கள்.*
மேலும் சிந்திக்க,
பெண், மண், பணம், காசு, துட்டு, மணி போன்றவற்றின் பின்னால் அலையாமல் நல்ல மனிதனாக வாழ பழகிக் கொள்ளுங்கள்.
அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க உதடுகள் தன் பேச்சை நிறுத்திக் கொள்கிறது.
வயதாக வயதாகத்தான் தெரிகிறது நம் வாழ்நாள் முழுவதும் உடன் வர யாரும் இல்லை என்று.
தனியா தானே வந்தாய். தனியாக தான் போக வேண்டும் என்று இந்த வாழ்க்கை கற்றுத் தருகிறது.
தவிக்கும் போது துடுப்பை தராதவர்கள் கரை சேர்ந்த பின் கப்பலை அனுப்பி என்ன பயன்.
புரிந்து கொண்டவர்கள் வெறுப்பதில்லை, பிரிந்து செல்ல நினைப்பவர்கள் நிலைப்பதில்லை.
சாதனையில் கை கோர்ப்பவரை விட, சோதனை காலங்களில் உங்களை கை பிடிப்பவரே உண்மையானவர்கள் அவர்களை இழந்து விடாதீர்கள்.
0 Comments