தற்கால சூழலில், மிகவும் பிரபலமாக இருக்கும் கணினி தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு.
பெரும்பாலான மாணவர்கள், செயற்கை நுண்ணறிவு தொடர்பாக கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் தொடக்க நிலையில் கற்றுக் கொள்வது மிகவும் கடினமானது தான்.
அதை எளிமையாகும் விதமாக, எவ்வித செலவும் இன்றி, முற்றிலும் இலவசமாக! உலகின் சிறந்து பேராசிரியர்கள் நடத்தும் வகுப்புகளை, உங்களால்! உங்கள் வீட்டில் இருந்தே பெற முடியும்.
அதற்கான வழிமுறைகள் பற்றி தான், இன்றைய கட்டுரை அலசுகிறது. மொத்தம் மூன்று தொகுதிகளாக, இந்த கட்டுரை வெளியாகும்! அதன் முதல் தொகுதி தான் இது.
1. அனைவருக்கும் ஆன ஜெனரேட்டிவ் (ஆக்கப்பூர்வ) AI.
Deeplearn.Ai இணையதளத்தில் ஆண்ட்ரூ NG போன்ற பிரபலமான பேராசிரியர்களால் கற்பிக்கப்படும் பயிற்சி வகுப்பு .
புதுமுக மாணவர்களுக்கு மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மூன்று பிரிவுகளைக் கொண்டு இந்த பயிற்சி வகுப்பில், செயற்கை நுண்ணறிவு தொடர்பான அடிப்படைத் தகவல்கள், திறன்மிகு மொழி மாதிரிகள்(LLM) மற்றும் ஆழ்ந்த கற்பித்தல்(DEEP LEARNING) தொடர்பான தகவல்களை, தெரிந்து கொள்ள முடியும்.
இதன் மூலம் ஜெனரேட்டிவ் AI துறையில் ஒரு அடிப்படை அறிவை பெற முடியும்.
Coursera இணையதளத்தின் மூலம், இந்த பயிற்சி வகுப்பில் உங்களால் சேர முடியும். மேற்படி l, இதில் படிக்க கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால், உங்களுக்கு சான்றிதழ்கள் தேவைப்படும் பட்சத்தில் மட்டும், கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும்.
சிறப்பம்சங்கள்
1. சான்றிதழ் பெற முடியும்
2. அனைவருக்கும் புரியும் விதத்தில் உள்ளது.
3. கேள்வி பதில்கள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
2. Harvard பல்கலைக்கழகம் வழங்கும் CS 50 Ai பயிற்சி
மிகவும் பிரபலமான, கணினி அறிஞரான டேவிட் J மாலன் ( David J.malan ) அவர்கள் நடத்தும், சிறப்பு வகுப்பு தான்! இந்த CS 50 AI பயிற்சி வகுப்புகள்.
மேலும், அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹார்ட்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஊடாக, இந்த பயிற்சியை நீங்கள் பெற முடியும் . இணையவழியில் மிகவும் தேடப்பட்ட தகவல் தொழில்நுட்ப பயிற்சி வகுப்பும் இதுதான்.
இந்த பயிற்சியை நிறைவு செய்ய, ஏழு வாரங்கள் வரை எடுத்துக் கொள்ளும். Ai நிரல் மொழிகள்,கையெழுத்து உணர்தல்,கருவி மொழிபெயர்ப்பு Ai மற்றும் தேடல் பொறிகள் போன்றவற்றை குறித்து, நீங்கள் விரிவாக அறிந்து கொள்ள முடியும்.
ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 10 மணி நேரம் ஆவது நீங்கள் செலவிட்டால்தான், இந்த பயிற்சி வகுப்பை பயனுள்ளதாக நிறைவு செய்ய முடியும்.
மேலும் உங்களுக்கு பைத்தான் போன்ற, ஏதாவது ஒரு கணினி மொழியில் அடிப்படை அறிவு இருப்பது சிறப்பு. இந்த பயிற்சி வகுப்பை EDX இணையதளத்தில் உங்களால் பெற முடியும். உங்களுக்கு சான்றிதழ் தேவைப்பட்டால் கூடுதலாக பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
சிறப்பம்சங்கள்
1. விரிவான விளக்கங்கள்
2. சுய கற்றல் அடிப்படையிலானது
3. நடுநிலை அளவில் தேர்ச்சி பெற முடியும்.
செயலாக்க செயற்கை நுண்ணறிவுக்கான அறிமுகம்
கூகுள் நிறுவனம் நடத்தும் மிகவும் எளிமையான ஒரு பயிற்சி வகுப்பு தான் இது. இந்த பயிற்சி வகுப்பை மேற்கொள்வதற்கு, உங்களுக்கு அதிகப்படியான தொழில்நுட்ப அறிவு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
செயலாக்க நுண்ணறிவு மற்றும் கருவி கற்பித்தல்(machine learning) ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடுகள் குறித்து, உங்களால் எளிமையாக அறிந்து கொள்ள முடியும்.
மேலும் google நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கருவிகள் தொடர்பாகவும், உங்களால் அறிந்து கொள்ள முடியும்.
இந்த வகுப்பை சுமார் ஒரு மணி நேரத்தில் உங்களால் நிறைவு செய்ய முடியும். மேலும், அதை நிறைவு செய்ததற்கான ஒரு முத்திரையும் உங்களுக்கு வழங்கப்படும்.
சிறப்பம்சங்கள்
1. புதிதாக கற்பவர்களுக்கு எளிமையானது
2. அதிகப்படியான தொழில்நுட்ப தகவல்களோடு குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை.
3. மிகக் குறுகிய காலத்தில் நிறைவு செய்து விடலாம்
4. கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கழிவுகள் குறித்து அறிந்து கொள்ள முடியும்.
மேலும் இதுபோன்ற சிறந்த பயிற்சி வகுப்புகளோடு அடுத்த கட்டுரையில் உங்களை சந்திக்கிறேன்.
மேற்படி இந்த கட்டுரையானது, itsfoss இணையதளத்தில் swayam sai das அவர்களால் எழுதப்பட்டது.
இந்த கட்டுரையை மூன்று தொகுதிகளாக பிரித்து, மொழிபெயர்த்து, எளிமைப்படுத்தி உங்களுக்காக "கணியம்" இணையதளத்தில் வெளியிடுகிறேன்.
மேற்படி இந்த கட்டுரையில், ஏதேனும் பிழைகள் இருப்பின் தயங்காமல் என்னுடைய மின் மடல் முகவரிக்கு தெரிவிக்கவும். உங்களுடைய கருத்துக்களுக்காக நான் எப்போதும் காத்திருக்கிறேன்.
மொழிபெயர்த்தவர்:-
ஸ்ரீ காளீஸ்வரர். செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். கணியம் அறக்கட்டளை.
| By srikaleeswarar on July 17, 2024 |
|
|
வலைப்பக்கம்
மின் மடல் முகவரி: srikaleeswarar@myyahoo.com
0 Comments