Recent Posts

Responsive Advertisement

Know your Simcard details

"சிம் கார்டு பற்றி"
எப்படி செக் செய்வது? மத்திய தொலைத்தொடர்பு துறையின் சஞ்சார் சாதி (Sanchar Saathi) வெப்சைட்டுக்கு செல்லுங்கள். முகப்பு பக்கத்தை கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள். இப்போது, சிட்டிசன் சென்டரிங் சர்வீசஸ் (Citizen Centric Services) தலைப்பின் கீழ் பல்வேறு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்கள் மொபைல் இணைப்பை அறிக (Know Your Mobile Connection) ஆப்ஷனை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
இப்போது, உங்களது 10 இலக்க மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். அதோடு கேப்ச்சா கோட் வெரிபிகேஷன் இருக்கும். இதை முடித்துவிட்டால், உங்களது மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்பட்டும். இந்த ஓடிபியை கொடுத்தால், அடுத்த பக்கம் தோன்றும். அதில் உங்களது ஆதாரில் எத்தனை நம்பர் இணைக்கப்பட்டிருக்கிறதோ அவற்றின் முழு பட்டியல் தோன்றும்.

இதில் நீங்கள் பயன்படுத்ததாத சிம் கார்டு எண் இருந்தால், தேவையில்லை (Not Required) என்னும் ரிக்குவஸ்ட் கொடுத்துவிடுங்கள். அதேபோல உங்களுக்கு தெரியாத நம்பர் இணைக்கப்பட்டிருந்தால், இது என்னுடை நம்பர் இல்லை (Not My Number) என்னும் ரிக்குவஸ்ட் கொடுக்க வேண்டும். இந்த 2 ஆப்ஷன்களுக்கு அடுத்தப்படியான தேவை (Required) என்னும் ஆப்ஷனும் இடம் பெற்றிருக்கும்.

இதை நீங்கள் பயன்படுத்தும் எண் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்பதற்காக கொடுக்க வேண்டிய ரிக்குவஸ்ட் ஆப்ஷனாகும். இதில் 9 சிம் கார்டுகளுக்கு மேல் இருந்தால் அதில் தேவையில்லாதவற்றை மேற்கூறிய ஆப்ஷனை பயன்படுத்தி குறைத்து விடுங்கள். இல்லையென்றால், வரும் நாட்களில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது

Post a Comment

0 Comments


Comments

Ad Code

Responsive Advertisement