சின்ன வயசுல இந்த கேக் பெயர் கேள்வி படும் போது முதல்ல நானும் இப்படித்தான் நினைச்சு சிரிச்சேன்... ஆனா நான் நினைச்சா மாதிரி இது ஆட்டுக்கால்ல எல்லாம் செய்யறது இல்லை. பின்ன ஏன் ஆட்டுக்கால் கேக்னு சொல்றாங்கனு தெரியுமா 🤔 இதோட வடிவம் ஆட்டுக்கால் குளம்பும் அதுல இருக்க வெடிப்பு மாதிரியே இருக்கும். அதனாலதான் இதுக்கு அந்த பெயர். எங்கூருல உள்ள எல்லா டீக்கடையிலையும் இந்த கேக் கிடைக்கும்.
இந்த ஆட்டுக்கால் கேக் மைதா மாவுலதான் செய்யறாங்க. இதை செய்யறதும் ரொம்ப ஈஸிதான்... எப்படி செய்யறதுன்னு சொல்றேன், செஞ்சி பார்த்துட்டு கமெண்ட் பண்றிங்களா...
தேவையான பொருட்கள் :
சர்க்கரை – 1/2 கப்
ஏலக்காய் – 3
மைதா மாவு – ஒரு கப் (250 கிராம்)
ரவை – இரண்டு டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை
உப்பு – ஒரு சிட்டிகை
நெய் – ஒரு டீ ஸ்பூன்
காய்ச்சிய பால் – தேவையான அளவு
செய்முறை :
சர்க்கரையையும் ஏலக்காயையும் ஒரு மிக்சி ஜார்ல போட்டு நல்லா பொடிச்சுக்கோங்க.
இன்னொரு பாத்திரத்தில அரைச்ச சர்க்கரை, மைதா, ரவை, அரிசி மாவு, பேக்கிங் சோடா, உப்பு, ஒரு ஸ்பூன் நெய் எல்லாத்தையும் சேர்த்து நல்லா கலந்துக்கோங்க.
மாவு பிசைய இது கூட காய்ச்சிய பாலை கொஞ்சம் சேர்த்து கையால உருண்டையா உருட்டுற அளவுக்கு நல்லா பிசைஞ்சிக்கோங்க.
இந்த கலவையை ஒரு 20 நிமிஷம் ஊற வச்சிடுங்க.... 20 நிமிஷத்துக்கு பிறகு அந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளா பிரிச்சி நடுவுல சின்னதா ஒரு கோடு போட்டுக்கோங்க...
ஒரு சட்டியில உருண்டை பொரிக்கிற அளவு எண்ணெய் ஊத்தி, நல்லா சூடானதும் அடுப்பை மிதமான தீயில வச்சிட்டு, அந்த உருண்டைகளை பொரிச்சி பொந்நிறமா வந்ததும் எடுத்து தட்டுல வச்சிடுங்க...
அவ்வளவுதான் நண்பர்களே... சாயந்தரம் டீ, காபி குடிக்கற நேரத்துல மொறு மொறுப்பா சாப்பிட அசத்தலான ஒரு ஸ்னாக்ஸ் தயார்...
இந்த ஆட்டுக்கால் கேக்குக்கு கஜடான்னு ஒரு பெயரும் இருக்காம்.
ஓகே ப்ரண்ட்ஸ் பதிவுக்கு மறக்காம ஒரு லைக் பண்ணிட்டு உங்க நண்பர்களோட ஷேர் பண்ணிக்கோங்க...
0 Comments